தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்த காட்சி.
குப்பையை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்
- குளத்தின் அருகில் தற்காலிக ஏற்பாடாக சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.
- இதனால் குப்பைகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள குளத்தின் அருகில் தற்காலிக ஏற்பாடாக சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மர்ம ஆசாமிகள் யாரோ குப்பைகளை தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் குப்பைகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து உடனடியாக மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் பேரில் ஆணையர் உடனடியாக திருபுவனை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.