புதுச்சேரி

மோடி குறித்த கேள்விக்கு பதில் அளித்த பெண்ணுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பரிசு தொகை வழங்கிய காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளார்.

மோடி குறித்து கேள்வி கேட்டு பாரதிய ஜனதா அமைச்சர் பரிசுத்தொகை வழங்கினார்

Published On 2023-07-18 09:01 GMT   |   Update On 2023-07-18 09:01 GMT
  • 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியை தொடங்கி வைக்க செல்லும் போது அங்கு பொதுமக்களிடம் பேசி ஏதாவது ஒரு சலசலப்பை ஏற்படுத்துவார்.
  • ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசு திட்டம் மற்றும் மோடி குறித்து கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகா ரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியை தொடங்கி வைக்க செல்லும் போது அங்கு பொதுமக்களிடம் பேசி ஏதாவது ஒரு சலசலப்பை ஏற்படுத்துவார்.

குறிப்பாக பணியை தொடங்கி வைக்கும் முன் நடக்கும் பூஜையின் போது சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்வதும், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று சொன்னது, பாகூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சரிடம் பொதுமக்கள் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பியது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று புதுவை மணவெளி தொகுதி டி.என்.பாளையம், ஆண்டியார்பாளையம் நோனாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய பகுதி களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை யில் நடந்தது. இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் 100 நாள் வேலை வாய்ப்பு பணியை தொடங்கி வைத்தார். அப்போது 100 நாள் பணிக்கு வந்த பெண்களிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசு திட்டம் மற்றும் மோடி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதில் மோடி அரசு கொண்டு வந்த 5 லட்ச ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன என்று கேட்டார், யாருக்கும் பதில் சரியாக தெரியாததால் ஒரு பெண் ஆயுஸ்மான் என்று கூறிய உடனே அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரூபாய் ஆயிரம் பரிசுத்தொகை வழங்கினார்.

கிராமப்புற பகுதிகளுக்கு மத்திய அரசு அமைக்கும் சாலை திட்டத்தின் பெயர் என்ன என கேட்டார், அதற்கு பிரதான் மந்திரி சடக் யோஜனா என ஒரு பெண் பதிலளித்தார் அவருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கினார்.

மோடியின் பிறந்தநாள் என்றைக்கு என அமைச்சர் கேள்வி எழுப்பிய போது, எங்கள் பிறந்த நாள் தேதியே எங்களுக்கு தெரிய வில்லை என பெண்கள் பதில் அளித்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு ஆண் மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17 என கூறியதால் அவருக்கும் அமைச்சர் பரிசுத்தொகை வழங்கினார். இதேபோல் பிரதமர் மோடி பங்கேற்கும் மனதின் குரல் நிகழ்ச்சி மாதத்தின் எந்த வாரம் நடக்கும் என்ற கேள்விக்கு கடைசி வாரம் எனக் கூறிய பெண்ணுக்கு ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

பா.ஜனதா அமைச்சர் 100 நாள் வேலை திட்டப் பணியை தொடங்கி வைக்க செல்லும் இடத்தில் மத்திய அரசு திட்டம் மற்றும் மோடி குறித்து கேள்வி எழுப்பி பதில் அளித்தது அவர்க ளுக்கு தலா ரூபாய் 1000 பரிசு வழங்கியதால் பெண்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.

மேலும் இதே போல் ஒவ்வொரு முறையும் நான் வரும் பொழுது கேட்கும் உரிய பதிலளித்தால் பணம் வழங்கப்படும் என கூறி விட்டு அமைச்சர் சென்றார்.

Tags:    

Similar News