கோப்பு படம்.
இறந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் மாயம்
- ஈமச்சடங்கு நடந்த போது மூதாட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிசெயினை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
- சுடுகாட்டு ஊழியர்களிடம் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
புதுச்சேரி:
ஈமச்சடங்கு நடந்த போது மூதாட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிசெயினை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
புதுவை கிருஷ்ணா நகர் 12-வது குறுத்து தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தாயார் சரோஜினி வயது முதிர்ச்சி காரணமாக இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய கருவடிக்குப்பம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
சரோஜினி சுமங்கலியாக இருந்ததால் அவரது கழுத்தில் 8 பவுன் தாலி செயினை அணிவித்து சுடுகாட்டுக்கு உடலை கொண்டு வந்தனர். சுடுகாட்டில் ஈமச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது திடீரென சரோஜினி கழுத்தில் அணிவித்து இருந்த 8 பவுன் தாலி செயின் மாயமானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் சுரேஷ் சுடுகாட்டு ஊழியர்களிடம் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து சுரேஷ் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.