புதுச்சேரி

தற்காலிக அரசு பள்ளியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி

சமுதாய கூடத்தில் தற்காலிகமாக அரசு பள்ளி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2022-10-22 07:35 GMT   |   Update On 2022-10-22 07:35 GMT
  • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர்-3-ல் செயல்பட்டு வரும் பெரியபாளையத்தம்மன் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.
  • நகராட்சி ஒத்துழைப்புடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அனைத்து நடவடிக்கைகளையும் விடா முயற்சியுடன் மேற்கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர்-3-ல் செயல்பட்டு வரும் பெரியபாளையத்தம்மன் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

அதையொட்டி, தற்காலிகமாக அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் பள்ளி செயல்படுவதற்காக கல்வித்துறை மற்றும் நகராட்சி ஒத்துழைப்புடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அனைத்து நடவடிக்கைகளையும் விடா முயற்சியுடன் மேற்கொண்டார்.

சமுதாய கூடத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தற்காலிக பள்ளியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கல்வி துறை (பெண்கள்) துணை இயக்குனர் நடனசபாபதி, குமார் (வட்டம்-2), தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன் , மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மீனவர் அணி விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் செல்வம்பால் நன்றி கூறினார்.

Tags:    

Similar News