புதுச்சேரி

வணிகவரிதுறை பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசிய காட்சி.

சுமை தெரியாமல் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்-ரங்கசாமி பேச்சு

Published On 2022-11-14 14:42 IST   |   Update On 2022-11-14 14:42:00 IST
  • புதுவை, தமிழக வணிகவரி துறை அதிகாரிகளுக்கு 2 வார புத்தாக்க பயிற்சி முகாம், ஆராய்ச்சி துறை கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது.
  • மக்கள் மனம் கோணாமலும், சுமை தெரியாமலும் வரியை வசூலிக்க வேண்டும்.இன்னும் 3 மாத காலம் உள்ளது. அதற்குள் கூடுதலாக வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பதன் மூலம்தான் மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகளை செய்ய முடியும்.

புதுச்சேரி:

புதுவை, தமிழக வணிகவரி துறை அதிகாரிகளுக்கு 2 வார புத்தாக்க பயிற்சி முகாம், ஆராய்ச்சி துறை கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது.

புதுவை அரசின் வணிகவரித்துறை, மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை தேசிய சுங்கம், மறைமுக வரி, போதை பொருள் தடுப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் புதுவை வணிகவரித்துறை ஆணையர் ராஜசேகர் வரவேற்றார்.

சென்னை நிறுவன முதன்மை கூடுதல் இயக்குனர் உதயபாஸ்கர் தொடக்கவுரையாற்றினார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மத்திய அரசு கடந்தகாலத்தில் 70:30 என்ற விகிதத்தில் நிதி அளித்தது. தற்போது மத்திய அரசு வழங்கும் நிதி குறைந்துவிட்டது. மாநில அரசின் வருவாயை பெருக்கிக்கொள்ளுங்கள் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல ஆண்டாக புதுவையில் வரிகள் உயர்த்தப்படவில்லை.

மக்கள் மனம் கோணாமலும், சுமை தெரியாமலும் வரியை வசூலிக்க வேண்டும்.இன்னும் 3 மாத காலம் உள்ளது. அதற்குள் கூடுதலாக வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பதன் மூலம்தான் மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகளை செய்ய முடியும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அருண் பிரசாத் நன்றி கூறினார். விழாவில் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையர் பத்மஸ்ரீ, துணை இயக்குனர் அஜய்பிரசாத், வணிகவரித்துறை அதிகாரிகள், பயிற்சி நிறுவன அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News