புதுச்சேரி

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்த காட்சி.

புதுவை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2022-09-25 04:58 GMT   |   Update On 2022-09-25 04:58 GMT
  • மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.
  • மறைந்த அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு  பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு சிறந்தது மகாளய பட்ச காலத்தில் பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மறைந்த அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இதன் படி புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோரை வேண்டி திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபட்டனர்.

இதே போல் வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை, முத்தியால்பேட்டையில் உள்ள செங்குந்தர் மரபினர் பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

அதே போல் வில்லியனூர் அடுத்த பழமையான திருக்காஞ்சி கெங்கவராகநதீஸ்வரர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

Tags:    

Similar News