புதுச்சேரி

பலியான வேணுகோபால்


புதுவை அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து நெல் வியாபாரி கருகி பலி

Published On 2022-08-01 12:05 IST   |   Update On 2022-08-01 12:05:00 IST
  • புதுவை கரிக்கலாம் பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால்.
  • தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில்பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை கரிக்கலாம் பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65). நெல் வியாபாரி. இவருக்கு ஆண்டாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சமாதி பஸ் நிறுத்தம் அ ருகே வேணுகோபால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனால் பதற்றம் அடைந்த வேணுகோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது அவர்நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மோட்டார் சைக்கிள் விழுந்து தீப்பற்றிக்கொண்டது. இதில்உ டல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிளும் எரிந்து தீக்கிரையாகின. அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில்பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் கருகிய நிலையில் இருந்த வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு வழிப்பறி செய்யும் நோக்கில் வேணுகோபாலை மர்ம நபர்கள் வழிமறித்து கொலை செய்து எரித்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டால் வாகனத்தில் இருந்து உடனடியாக தப்பியோட முயற்சிப்பார்கள், ஆனால் வேணுகோபால் மோட்டார் சைக்கிள் இருக்கையிலேயே அமர்ந்து இருந்துள்ளார். உடலில் தீப்பற்றி எரிந்தவாறே சரிந்த கீழே விழுந்துள்ளார். அதன் பிறகும் அதே இடத்தில் எரிந்து கரிக்கட்டையாகியுள்ளார். இதனால் அவரது சாவில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே நெல் வியாபாரி வேணுகோபால் உயிரோடு எரியும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News