புதுச்சேரி
பாலமுத்து மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் நடந்த காட்சி.
பாலமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
- திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாட்டுக்காரன் சாவடியில் பிரசித்தி பெற்ற பாலமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
- இக்கோவிலில் 14-ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாட்டுக்காரன் சாவடியில் பிரசித்தி பெற்ற பாலமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 14-ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. ஊரணி பொங்கலிட்டு ஊர்வலமாக வந்த பெண்கள் பால முத்துமாரியம்மன் கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து செடல் உற்சவம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு தீபாரதனைகள் அபிஷேகங்கள் நடந்தது.
இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.