புதுச்சேரி

கோப்பு படம்.

மாணவர்கள் விளையாட்டையும் கற்றுக்கொள்ள வேண்டும்

Published On 2022-07-24 05:42 GMT   |   Update On 2022-07-24 05:42 GMT
  • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மகாபலிபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
  • உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கவர்னர் தமிழிசை ஜோதியை வரவேற்று தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மகாபலிபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

இதற்கான ஒலிம்பியாட் ஜோதி புதுவைக்கு வந்தது. உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கவர்னர் தமிழிசை ஜோதியை வரவேற்று தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. கல்வித்துறை செயலர் முத்தம்மா, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

செஸ்போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் போட்டியை தொடங்கி வைக்க வருவது நமக்கு பெருமை. பிரதமர் விளையாட்டு வீரர்களை அழைத்து தேநீர் விருந்து வைக்கிறார், வெற்றி பெற்றவர்களை பாராட்டுகிறார். நம் கலாச்சாரத்தை உலக நாடுகள் அறியும் வகையில் ஒலிம்பியாட் அமையும். மாணவர்கள் படிப்புக்கு மேல் விளையாட்டையும் கற்க வேண்டும்.

வாழ்க்கையில் எதையும் போட்டியாக எடுத்து, சாதனை புரிய விளையாட்டு கற்றுத்தருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செஸ் போட்டிகள் மூளைக்கு வேலை கொடுக்கிறது. இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் செஸ் விளையாட்டில் தேர்ந்த வீரர்கள் உள்ளனர்.

விமான பணி பெண்களுக்கு முதலுதவி கொடுப்பதில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. மருத்துவ உபகரணங்களை உடனடியாக எடுத்து சிகிச்சை தரும் வகையில் விமானங்களில் முதலுவித பெட்டிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News