புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழுக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

சென்டாக் சேர்க்கையில் மாணவர்களிடம் இருப்பிட சான்றை உறுதி செய்ய வேண்டும்

Published On 2022-09-14 09:32 IST   |   Update On 2022-09-14 09:32:00 IST
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில நிர்வாக குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தினேஷ் பொன்னையா தலைமையில் நடந்தது.‌
  • நெடுஞ்சாலையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தினை கட்டுப்படுத்திடவும், சீர்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில நிர்வாக குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தினேஷ் பொன்னையா தலைமையில் நடந்தது.‌

மாநில செயலாளர் சலீம் அறிக்கை சமர்பித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நாரா. கலைநாதன், சேது செல்வம், வ.சுப்பையா, அந்தோணி, அமுதா, மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சாலை பணியின் காரணமாக போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தடுத்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தினை கட்டுப்படுத்திடவும்,

சீர்படுத்த வேண்டும்

சென்டாக் மாணவர் சேர்க்கையில் புதுவையை சார்ந்தவர் என்பதை உறுதி செய்ய இருப்பிடச் சான்று கோரப்பட வேண்டும், மேலும் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News