புதுச்சேரி
ஸ்பின்கோ ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய காட்சி.
ஸ்பின்கோ ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
- திருபுவனை பகுதியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையில் 350 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
- அரசே ஸ்பின்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசாலை சந்திப்பில் மறியல் செய்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை பகுதியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையில் 350 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த ஆலை 3 மாதமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் நூற்பாலை தொழிலாளர்கள் உடனடியாக நூற்பாலையை இயக்க வேண்டும். உற்பத்தி செய்து ஆலையில் வைத்திருக்கும் நூலை விற்று தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
அரசே ஸ்பின்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசாலை சந்திப்பில் மறியல் செய்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.