புதுச்சேரி

கழிவு நீர் வாய்க்கால் பணியை மத்திய மந்திரி எல்.முருகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

கழிவுநீர் வாய்க்கால் பணி-மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

Published On 2022-11-06 10:11 IST   |   Update On 2022-11-06 10:11:00 IST
  • முதலியார்பேட்டை தொகுதி உழந்தை ஜோதி நகரில் ரூ .14¾ லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் பணியை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
  • இப்பணி தொடக்க விழா அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை தொகுதி உழந்தை ஜோதி நகரில் ரூ .14¾ லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் பணியை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

முதலியார்பேட்டை தொகுதி உழந்தை ஜோதி நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து அசோக்பாபு எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இப்பணி தொடக்க விழா அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கழிவுநீர் வாய்க்கால் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சபா நாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News