புதுச்சேரி

விற்பனைகுழு ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்திய காட்சி.

விற்பனைகுழு ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2022-06-09 09:40 GMT   |   Update On 2022-06-09 09:40 GMT
  • 14 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விற்பனைகுழு ஊழியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
  • ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

புதுச்சேரி:

10 மாத சம்பள நிலுவை, பணி நிரந்தரம் உட்பட கோரிக்கைகைளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. விற்பனை குழு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அப்போது லாஸ்பேட்டையில் விவசாயி களை உழவர்சந்தையில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள் வீணானது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 நிரந்தர, 5 தற்காலிக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேநேரத்தில் புதுவை உழவர்சந்தையில் விவசாயிகள் வழக்கம் போல் வியாபாரம் செய்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் போராட்டம் தொடர்ந்தது. தட்டாஞ்சாவடி விற்பனை குழுவின் குடோனில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோசம் போட்டனர். போராட்டத்தால் விவசாயி களுக்கு வழங்கப்படும் தராசு, எடை கற்கள் வழங்கப்பபடவில்லை. ஆனால், உழவசந்தைகள் இயங்கியது.

Tags:    

Similar News