கோப்பு படம்.
- கோவில் உண்டி யலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- புதுவை காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் முத்தலாயம்மன் கோவில் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலையில் கோவில் உண்டி யலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுவை காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் முத்தலாயம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.சம்பவத்தன்று இரவு கோவிலில் பூஜை மற்றும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் கோவில் பரா மரிப்பாளர் வேல்முருகன் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலை 6 மணிக்கு கோவிலில் பூஜை செய்ய வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கோவில் நிர்வாகி வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பும் இக்கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த நபரே தற்போதைய சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என கோவில் நிர்வாகி வேல்முருகன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.