சாலை அமைக்கும் பணியை துணை சபாநாயகர் ராஜவேலு லட்சுமிகாந்தன் எம் எல் ஏ, பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
ரூ.26.46 லட்சம் செலவில் சாலை வசதி
- ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
- இந்திரா நகரில் இருந்து பணந்தோப்பு அரசு குடியிருப்பு பகுதிக்கு இணைப்பு சாலை ரூ.14.32 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
இந்தப் பகுதிக்கு சாலை வசதி அமைத்து கொடுக்க தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக ரூ.12.16 லட்சம் செலவில் செம்மண் சாலை அமைக்க ஆதிதிராவிடர் மேம்பாட்டு வகைகளை கழகம் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான தொடக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக
இதில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்திரா நகரில் இருந்து பணந்தோப்பு அரசு குடியிருப்பு பகுதிக்கு இணைப்பு சாலை ரூ.14.32 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் துரைசாமி, கிருமாம்பாக்கம் பேட் பஞ்சாயத்து தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் ஏழுமலை, செயலாளர்கள் சேகர், முருகன், முத்துபாலன், சுதர்சனன், கண்ணன், சேரலாதன், அன்பரசன் மற்றும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.