புதுச்சேரி

அண்ணா சிலைக்கு மரியாதை  செலுத்திய போது எடுத்த படம்.

அண்ணா சிலைக்கு மரியாதை

Published On 2022-09-16 13:56 IST   |   Update On 2022-09-16 13:56:00 IST
  • புதுவை எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்கப்பணம் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேரவை அலுவலகத்தில் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்கப்பணம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரவை தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் ரத்தினகுமார், பொருளாளர் ரங்கநாதன், இணைச்செயலாளர் எல்.ஐ.சி. சாம்ராஜ், துணைத்தலைவர்கள் ஜெயராம், பரமேஸ்வரி, துணைசெயலாளர் அனிதா கணேசன், மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News