புதுச்சேரி

கோப்பு படம்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்-பா.ம.க. கோரிக்கை

Published On 2022-11-09 14:43 IST   |   Update On 2022-11-09 14:43:00 IST
  • புதுவை அரசின் காவல்துறையில் சப்-இன்பெக்டர் பணிக்கு தேர்வு செய்வதற்கு அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட ப்பட்டுள்ளது.
  • அப்படி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று பா.ம.க. போராட்டத்தில் இறங்கும்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ம.க அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் காவல்துறையில் சப்-இன்பெக்டர் பணிக்கு தேர்வு செய்வதற்கு அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட ப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு இல்லாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதே பதவிக்கு கடந்த 2010-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் இதே பதவிக்கு எம்.பி.சி. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்றி நியமனம் செய்யப்பட்டது.

ஆனால் இன்றைய அறிவிப்பில் அத்தகைய எம்.பி.சி. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படு கொலையாகும்.

2012-ம் ஆண்டு அரசாணை யை காரணம் காட்டிபி கிரேடு இட ஒதுக்கீடு இல்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பெரும்பான்மை சமுதாய மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு இப்படி வஞ்சிக்கபடுவது ஏற்க முடியாது.

உடனடியாக அமைச்சர வையை கூட்டி 2012 அரசாணையை ரத்து செய்துவிட்டு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (எம்.பி.சி.) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அப்படி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று பா.ம.க. போராட்டத்தில் இறங்கும்.

தேவைபட்டால் நீதிமன்றத்தை அணுகி தடையான பெறவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News