புதுச்சேரி

கோப்பு படம்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு-என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தல்

Published On 2022-11-14 10:01 IST   |   Update On 2022-11-14 10:01:00 IST
  • புதுவையில் 60 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்திற்கான அறிவிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது.
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்ற வேண்டியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை என்.ஆர். இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் 60 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்திற்கான அறிவிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது. இது குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பதவி என்பதால் புதுவையில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடஒதுக்கீடு பின் பற்றடவில்லை. குறிப்பாக பிற்படுத்தப் படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீடான 27 சதவீதக் கணக்குப்படி 60 பணியிடங்களில் 19 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுவையில் மிகவும் பிற்படுத்தப் படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், மீனவர்களுக்கு 2 சதவீதம், முஸ்லிம்களுக்கு 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 0.5 சதவீதம் என நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை கடை பிடிக்கப்படவில்லை.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூக மக்கள் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்.

எனவே, புதுவை அரசு உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, குரூப் 'பி' அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் சமூக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். அதுவரையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News