கால்வாய் சீரமைப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.
சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்கள் சீரமைப்பு - கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- கழிவு நீர் செல்லாமல் மண் சரிந்து வீட்டு வாசல்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருந்தது.
- இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ரோடியர்பேட்டில் உள்ள அங்குநாயகர் தோப்பு பகுதியில் ப-வடிவ வாய்க்கால் சிதைந்து கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லாமல் மண் சரிந்து வீட்டு வாசல்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருந்தது.
இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே நகராட்சி டாக்டர் துளசிராமன் நகராட்சி செயற்பொறியாளர் சிவபா லன், உதவிப்பொறியாளர் பிரபாகரன், இளநிலைப்பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கென்னடி எம்.எல்.ஏ.இது சம்பந்தமாக தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி.யுடன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சுத்தகரிப்பு பணியினை மேற்கொண்டனர்.
மேலும் முறையாக ப-வடிவ வாய்க்கால் கட்டுமான பணியினை கூடுதலாக கட்டி கொடுக்கும் படி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அதனை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.