புதுச்சேரி

கோப்பு படம்.

வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Published On 2022-12-09 13:14 IST   |   Update On 2022-12-09 13:14:00 IST
  • புயல் மழை எச்சரிக்கையையொட்டி புதுவை கடற்கரை பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
  • ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புயல் மழை எச்சரிக்கையையொட்டி புதுவை கடற்கரை பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.

பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பால் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஊர் பஞ்சாயத்தார் உடனிருந்தனர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, கடல் அரிப்பால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டும் பணி மீண்டும் தொடங்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News