புதுச்சேரி

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்த காட்சி.

ரேஷன்கடை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-12-29 14:25 IST   |   Update On 2022-12-29 14:25:00 IST
  • பாரதிய நியாயவிலை கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
  • ரேஷன்கடை ஊழியர்களின் 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

பாரதிய நியாயவிலை கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கவுரவ தலைவர் ஆசைத்தம்பி, தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தனர். துணைத்தலைவர் ரமேஷ், செயலாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அருள், வினோத்குமார், சக்திவேல், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நேரடி பணி பரிமாற்ற முறையை நிறுத்த வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களின் 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும்.

நேரடி பணி பரிமாற்ற முறையை ரத்து செய்யக்கோரி அமைச்சரவை அனுப்பிய கோப்புக்கு அனுமதி வழங்காத கவர்னரை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ரேஷன் கடை ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் பங்கேற்றனர்.

Tags:    

Similar News