புதுச்சேரி

பாரதியார் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

பாரதியார் சிலைக்கு ரங்கசாமி மாலை

Published On 2022-09-11 13:49 IST   |   Update On 2022-09-11 13:49:00 IST
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
  • பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள். லட்சுமிநாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா சார்பில் மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார். , வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் பாரதியார் திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதியார் சிலைக்கு தமிழறிஞர்கள், பொதுமக்கள் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News