புதுச்சேரி

ராஜேந்திராஸ் ஜவுளிக்கடையில் பட்டு சேலை கண்காட்சியை கடை உரிமையாளர் ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ராஜேந்திராஸ் பட்டு சேலை கண்காட்சி

Published On 2023-01-18 14:56 IST   |   Update On 2023-01-18 14:56:00 IST
  • புதுவை நேரு வீதியில் கடந்த 25 ஆண்டுகளாக ராஜேந்திராஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற சுபமுகூர்த்த திருநாளை முன்னிட்டு மாபெரும் பட்டு சேலை கண்காட்சி நடைபெறுகிறது.
  • இந்த கண்காட்சியில் பட்டு நெசவாளர்களின் நேரடி தள்ளுபடி விற்பனையாக 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் ரூ. 600 முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான பட்டுப் புடவைகள் கண் காட்சியில்விற்பனைக்கு உள்ளது.

புதுச்சேரி:

புதுவை நேரு வீதியில் கடந்த 25 ஆண்டுகளாக ராஜேந்திராஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற சுபமுகூர்த்த திருநாளை முன்னிட்டு மாபெரும் பட்டு சேலை கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த பட்டு சேலை கண்காட்சி ஜனவரி 14 முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை கடையின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது:-

ஒவ்வொரு வருடமும் எங்களது கடையில் பட்டு சேலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பட்டு சேலை கண்காட்சி எங்களது ஷோரூமில் முதல் தளத்தில் பிரத்தியேகமாக நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் பட்டு நெசவாளர்களின் நேரடி தள்ளுபடி விற்பனையாக 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் ரூ. 600 முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான பட்டுப் புடவைகள் கண் காட்சியில்விற்பனைக்கு உள்ளது.

வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் இந்த சுபமுகூர்த்த திருநாளில் தங்களுக்கு விருப்பமான பட்டுப் புடவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் ரூ. 1000- க்கும் மேல் துணிகள் எடுக்கும் வாடிக்கை யாளர்களுக்கு புதுவை நேரு வீதி வணிக திருவிழா கூப்பன் மற்றும் புதுவை வணிகத் திருவிழா கூப்பன் வழங்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News