புதுச்சேரி

அதிகாரிகளுடன் எதிர்கட்சி சிவா எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.

தரமான சாலைகள் அமைக்க வேண்டும்

Published On 2022-10-23 10:20 IST   |   Update On 2022-10-23 10:20:00 IST
  • வில்லியனூர் கொம்யூன் மூலம் வசந்த நகருக்கு ரூ.17 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
  • செய்தார். அப்போது சாலைகளை மழையின்போது சேதமாகாத வகையில் தரமாகவும், நிர்ணயித்த காலத்திலும் முடிக்கச் செய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் கொம்யூன் மூலம் வசந்த நகருக்கு ரூ.17 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்த பணி தரமானதாகவும், குறித்த நேரத்தில் நடைபெறுகிறதா? என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலைகளை மழையின்போது சேதமாகாத வகையில் தரமாகவும், நிர்ணயித்த காலத்திலும் முடிக்கச் செய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்யநாராயணா மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், ராஜி, கே.வி.ஆர். ஏழுமலை, திலகர், லட்சுமணன், ரங்கராஜ், ராஜேந்திரன், ஸ்ரீதர், கணபதி, கார்த்திகேயன், அசோக், வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News