பதக்கம் வென்று சாதனை படைத்த வீரர்-வீராங்கணைகளை புதுவை டென்னிக்காய்ட் சங்க தலைவர் ராமு நாயக்கர், விரிவுரையாளர் சுப்ரமணியன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
புதுவை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை
- அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன் ஹரியானா மாநில டென்னிக்காய்ட் சங்கம் 46-வது தேசிய டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனியத்தில் நடத்தியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவிந்தராஜன், 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மகளீர் ஒற்றையர் பிரிவில் பழனியம்மா, 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
புதுச்சேரி:
அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன் ஹரியானா மாநில டென்னிக்காய்ட் சங்கம் 46-வது தேசிய டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனியத்தில் நடத்தியது.
இப்போட்டியில் புதுவை மாநிலத்தின் சார்பில் ஆண்கள் அணியில் கோவிந்தராஜன், தமிழ்வேந்தன், கலைவாணன், ஜெயகுமார், தேவேந்திரன் மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து ெகாண்டு 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.
மகளீர் அணியில் பழனியம்மாள் மகேஸ்வரி, கற்பகம், ஜெயப்ரதா, திவ்யா மற்றும் ராகவி ஆகியோர் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்து வெள்ளிபதக்கம் வென்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவிந்தராஜன், 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மகளீர் ஒற்றையர் பிரிவில் பழனியம்மா, 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இவர்களுடன் பயிற்சி யாளராக கரிகாலன் மற்றும் செல்வக்குமார் ஆகியோரும் மேலாளர்களாக வழக்கறிஞர் தினேஷ்குமார் அகில இந்திய நடுவராக அருள்பிரகாசம் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.
பதக்கம் வென்று புதுவை திரும்பிய வீரர்-வீராங்கணை களை பாகூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் புதுவை மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்கத்தின் தலைவருமான ராமு நாயக்கர், விரிவுரையாளர் சுப்ரமணியன் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி வரவேற்றனர்.