புதுச்சேரி

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.

புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

Published On 2022-10-25 04:55 GMT   |   Update On 2022-10-25 04:55 GMT
  • புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 நிறுவனங்களான, அசாம் திப்ரூகார் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், உத்திரபிரதேசம் கோரக்பூர் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், மத்திய பிரதேசம் ஜபல்பூர் -தேசிய பழங்குடியினர் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனம், பீகார் பட்னா -ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர்கள் அஷ்வனி குமார், கன்வர் நரேன், ரஜினிகாந்த் ஸ்ரீவஸ்தவா, அபரூப் தாஸ், டாக்டர் கிருஷ்ணா பாண்டே, சர்வதேச சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் முகேஷ் குமார், டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 5 இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ஒரு புதிய முதுகலை படிப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் முனைவர் பட்டத்திற்கான இரட்டை வழிகாட்டி முறை, மாநாடுகள், பட்டறைகள் நடத்துதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News