புதுச்சேரி
செந்தில்குமார் எம்.எல்.ஏ. நலிவுற்ற கலைஞர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிய காட்சி.
நலிவுற்ற கலைஞர்களுக்கு தொழில் உபகரணங்கள்
- புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் நலிவுற்ற தொழில் கலைஞர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12 பேருக்கு இஸ்திரி பெட்டி, 3 பேருக்கு நாதஸ்வரம், 4 பேருக்கு சிகை அலங்கார சுழல் நாற்காலி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் நலிவுற்ற தொழில் கலைஞர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாகூரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12 பேருக்கு இஸ்திரி பெட்டி, 3 பேருக்கு நாதஸ்வரம், 4 பேருக்கு சிகை அலங்கார சுழல் நாற்காலி வழங்கினார்.
இதேபோல் மீன்வளத்துறை சார்பில் புதுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 15 பேருக்கு முதியோர் உதவித் தொகையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வ ளத்துறை ஆய்வாளர் ஆறுமுகம், தி.மு.க. பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.