புதுச்சேரி

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசு வழங்கிய காட்சி.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு-அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்

Published On 2023-03-12 11:26 IST   |   Update On 2023-03-12 11:26:00 IST
  • புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.

 புதுச்சேரி:

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2022ம் ஆண்டுக்கான உலக மீன்வள தினவிழாவை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.48 ஆயிரம் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கோவிந்தசாமி, மீன்வள உதவி ஆய்வாளர்ஆறுமுகம் மற்றும் வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News