புதுவை நகரில் உள்ள ஒரு லாட்ஜூயில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனை
- தமிழக ரவுடிகள் புதுவையில் தஞ்சமடைந்து ள்ளதாக வந்த தகவலை அடுத்து லாட்ஜூகளில் விடிய விடிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- தமிழகம் முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
தமிழக ரவுடிகள் புதுவையில் தஞ்சமடைந்து ள்ளதாக வந்த தகவலை அடுத்து லாட்ஜூகளில் விடிய விடிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பல ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரவுடிகள் சிக்கி வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தமிழக ரவுடிகள் புதுவையில் தஞ்சம் புகுந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் புதுவை நகர பகுதியில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் புதுவை-தமிழக எல்லை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு 11 மணி முதல் விடிய விடிய இந்த சோதனை நீடித்தது. ஆனால் இந்த சோதனையில் தமிழக ரவுடிகள் யாரும் சிக்கவில்லை. எனினும் இந்த சோதனை நீடிக்கும் என்று புதுவை போலீசார் தெரிவித்துள்ளனர்.