புதுச்சேரி

பாதையாத்திரையை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் எம்.எல்.ஏ. ெஜயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி. 

மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரை

Published On 2023-09-03 07:45 GMT   |   Update On 2023-09-03 07:45 GMT
  • அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்து பாத யாத்திரையாக சென்றனர்.
  • பாத யாத்திரை அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலை அடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

புதுச்சேரி:

விநாயகருக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாத மும் சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி நடைபெறும். ஆவணி மாதத்தில் நடை பெறும் சங்கடஹர சதுர்த்தி மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

இதனை மகா சங்கடஹர சதுர்த்தி என அழைப்பது உண்டு. இந்த மகா சங்கடஹர சதுர்த்தியன்று ஒவ்வொரு ஆண்டும் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவில் வரை பக்தர்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம்.

அதுபோல் இன்று மகா சங்கடஹர சதுர்த்தியை யொட்டி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்து பாத யாத்திரையாக சென்றனர்.

இந்த பாத யாத்திரை நிகழ்ச்சியை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பாத யாத்திரையில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பாத யாத்திரை அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலை அடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News