புதுச்சேரி

சாலையை சீரமைக்ககோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

காரைக்கால் அருகே சாலையை சீரமைக்ககோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

Published On 2023-05-27 06:09 GMT   |   Update On 2023-05-27 06:09 GMT
  • சாலை போக்குவரதுக்கு லாயகற்ற நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
  • முதியவர்கள் இச்சாலை வழியாக செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் உள்ள பெரிய பேட் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில், கடந்த 22 ஆண்டுகளாக சாலை வசதி சரி செய்யப்படாமல், போக்குவரதுக்கு லாயகற்ற நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அவசர மருத்துவ சிகிச்சை க்கு ஆம்புல ன்ஸ், தீயணை ப்பு வாகனம் கூட வர முடியாத அளவிற்கு சாலை பழுதடைந்துள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் இச்சாலை வழியாக செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில், சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, சாலையை, உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News