கோப்பு படம்.
ஆட்டோகளுக்கு பெர்மிட் வழங்க வேண்டும்- அ.தி.மு.க. கோரிக்கை
- புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார்.
- ஆட்டோ பெர்மிட்டை புதுப்பிக்க உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஒட்டும் தொழிலாளர்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டது. பிறகு ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆட்டோ பெர்மிட் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ பெர்மிட்டை புதுப்பிக்க உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோவை புதுப்பிக்கும் போது ஏற்படும் கால தாமதத்திற்கு தினசரி ரூ.50அபராதம் விதிக்கின்றனர்.
ஆட்டோ எப்.சி. எடுக்கும் போது 2 மாத காலம் அபராதம் இல்லாத அனுமதி வழங்க வேண்டும்.
முதல்-அமைச்சர் உண்மை நிலைய உணர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத ஆட்டோ பெர்மிட்டை, தற்போது வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களின் துயர் துடைக்க வேண்டும்
இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.