புதுச்சேரி

பா.ஜனதா பட்டியலின அணி மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து மனு அளித்த காட்சி.

அமைச்சர் சந்திரபிரியங்காவுடன் பா.ஜனதா பட்டியலின அணி நிர்வாகிகள் சந்திப்பு

Published On 2023-02-23 14:40 IST   |   Update On 2023-02-23 14:40:00 IST
  • புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • இம்மனுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நிர்வாகிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் வழங்கினர்.

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் எந்தெந்த கிராமங்களுக்கு என்னென்ன வசதிகளை சிறப்பு கூறு நிதியின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற கோரிக்கை மனு பட்டியல் அணி சார்பில் தயாரிக்கப்பட்டது.

இம்மனுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நிர்வாகிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் வழங்கினர்.

மேலும் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான சுடுகாட்டு பாதை, மின் இணைப்புகள், சைடு வாய்க்கால்கள், நூலக வசதிகளை சிறப்பு கூறு இதில் மூலம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களுடனான ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்டது.

இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இந்த மார்ச்

31-ந் தேதிக்குள் உறுதி செய்யப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா உறுதி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது பட்டியலின் மாநில துணைத்தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், சுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர்கள் காமாட்சி, ராஜாராம், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் காத்தவராயன், நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News