புதுச்சேரி

கோப்பு படம்.

பாண்லே நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும்-ஏ.ஐ.டி.யூ.சி. வலியுறுத்தல்

Published On 2022-11-16 10:43 IST   |   Update On 2022-11-16 10:43:00 IST
  • புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இங்கு ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
  • வெளிமாநில நிர்வாக ங்களுக்கு பணம் தராததால் பால் வழங்குவதை நிறுத்திவிட்டனர். பால் பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இங்கு ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் தேவை. 50 ஆயிரம் லிட்டர் புதுவை கூட்டுறவு சங்கம் மூலமும், மீதமுள்ள பால் வெளிமாநிலத்திலும் கொள்முதல் செய்யப்படுகிறது.

கூட்டுறவு நிறுவனத்தில் ரூ.32-க்கு வாங்கப்படும் பால், வெளிமா நிலத்தில் ரூ.42-க்கு வாங்கப்படுகிறது. கூடுதல் செலவுடன் ரூ.48 அடக்கம் ஆகிறது. இந்த பாலை ரூ.44-க்கு விற்பனை செய்கிறது. இதனால் பாண்லே நிர்வாகத்துக்கு மாதம் ரூ.2.25 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அரசு நிதி வழங்காததால் வங்கிகளில் நிர்வாகம் கடன் பெற்றுள்ளது.

வெளிமாநில நிர்வாக ங்களுக்கு பணம் தராததால் பால் வழங்குவதை நிறுத்திவிட்டனர். பால் பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஊழியர்கள் வேலைநேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பாண்லே நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து நடத்தமுடியாத நிலை ஏற்படும்.

முதல்-அமைச்சர் இதை வேடிக்கை பார்க்காமல், பாண்லே நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பீடை ஈடு கட்ட தேவையான நிதியை வழங்கி காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News