மிஷின் வீதியில் உள்ள பாண்லே பாலகத்தை முற்றுகையிட வந்த சமூக அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
- புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாண்லே பால் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதியடைந்துள்னர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தீடீரென பாண்லே அலுவலகத்தின் மீது கல் வீசினார். இதனால் பாண்லே நிர்வாக அலுவலக கண்ணாடி உடைந்தது.
புதுச்சேரி:
புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாண்லே பால் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதியடைந்துள்னர்.
பால் தட்டுப்பாடை போக்க கோரி அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக அமைப்புகள் சார்பில் மிஷன் வீதியில் உள்ள பாண்லே நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கடற்கரை சாலை வியாபாரிகள் சங்கம் அருண் தலைமை வகித்தார். தமிழர் களம் அழகர், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் சமூக அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாண்லே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நிர்வாக திறமையற்ற பாண்லே அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தீடீரென பாண்லே அலுவலகத்தின் மீது கல் வீசினார். இதனால் பாண்லே நிர்வாக அலுவலக கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல் எறிந்த வாலிபரை பெரியகடை போலீசார் பிடித்து அழைத்து சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.