புதுச்சேரி

பாப்ஸ்கோ ஊழியர்கள் வயிற்றில் ஈரத்துணியை கட்டி போராட்டம் நடத்திய காட்சி.

பாப்ஸ்கோ ஊழியர்கள் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம்

Published On 2022-09-15 14:21 IST   |   Update On 2022-09-15 14:21:00 IST
  • புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கத்தினர்(ஏ.ஐ.டி.யூ.சி.) சட்டசபை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தீபாவளி பசார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கத்தினர்(ஏ.ஐ.டி.யூ.சி.) சட்டசபை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

55 மாத சம்பளம் வழங்க வேண்டும். தீபாவளி பசார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும். பாப்ஸ்கோ ரேஷன்கடைகளுக்கு 6 ஆண்டு வாடகை பாக்கியை தர வேண்டும்.

மதுபான ஆலைகளை தனியாருக்கு வழங்கி பாப்ஸ்கோவை புனரமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2-ம் நாளாக வயிற்றில் ஈரத்துணி அணிந்து போராட்டம் நடத்தினர். போராட்டாத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன், நிர்வாகிகள் குணா, கோவர்த்தனன்,பிரபு, ஏழுமலை, அமுதா , சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம் , ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News