புதுச்சேரி

பாண்டி மெரினாவில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

ஆறுகள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் - அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-07-20 13:27 IST   |   Update On 2022-07-20 13:27:00 IST
  • பாண்டி மெரினா அருகில் சாலை அமைப்பதற்கான பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
  • மணல்கள் கொண்டு செல்லப்பட்டு இருப்பதை கண்டார்

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பா கீரப்பாளையம் திப்பு ராயப்பேட்டையில் அமைந்துள்ள பாண்டி மெரினா அருகில் சாலை அமைப்பதற்கான பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது டன் கணக்கில் லாரிகளில் பாண்டி மெரினாவுக்கு பின்புறம் மணல்கள் கொண்டு செல்லப்பட்டு இருப்பதை கண்டார். அங்கு எந்த வித அரசு ஆணையின்றி யாரோ காடுகளை வெட்டி அழித்து அங்கு ஆக்கிரமித்து ஜெட் வைத்து சட்ட விரோதமான செயல்களை செய்து வருவது தெரிவந்தது.

இது குறித்து மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜி, வனவிலங்குகள் துறை இயக்குனர் வாஞ்சு, ஆகியோரிடம் கென்னடி எம்.எல்.ஏ. முறையிட்டார். இது சம்மந்தமாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோரை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கென்னடி எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், தி.மு.க. பிரமுகர் நோயல், நிசார், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, இளைஞர் அணி எமில், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, மோரீஸ் ஜெயசீலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News