பயனாளிகளுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கண் கண்ணாடி வழங்கிய போது எடுத்தபடம்.
300 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள்
- பா.ஜனதா சார்பில் 300 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை செந்தில்குமரன் ஏற்பாட்டில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
- சோலைநகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் 300 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை செந்தில்குமரன் ஏற்பாட்டில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் வழங்கி னர்.
பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், முத்தியால்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகருமான செந்தில்குமரன் ஏற்பாட்டில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை சோலைநகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
கண் சிகிச்சை முகாமில் பரிசோதித்துக்கொண்ட வர்களில் 300 பேருக்கு பார்வை குறைபாடு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கண் மருத்துவர் மூலம் கண் கண்ணாடிகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி அவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டையில் பா.ஜனதா செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகள் 300 பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினர்.
மேலும் இதனை ஏற்பாடு செய்த செந்தில்குமரனை அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் அரிதாஸ், மாநில இளைரஞணி நிர்வாகிகள் உமாசங்கர், ராக்பெடரிக் அஸ்வின், வர்த்தகபிரிவு மாநில செயலாளர் சீனிவாசன், பசு பாதுகாப்பு இயக்க தலைவர் கிருஷ்ணகாந்தன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவராசு, முகாம் தலைவர்கள் ராமச்சந்திரன், மலர், கவிதா, இளைஞரணி தொகுதி தலைவர் ராம்குமார், நிர்வாகிகள் சசிதரன், தினேஷ்குமார், வினோத், அரவிந்த் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்களான மீனவரணி மாநில நிர்வாகி சுதர்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விஜய்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் எம்.ஆர்.சரவணன், ஜெ.சரவணன், அருண்குமார், வடிவேலு மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.