புதுச்சேரி

சுனாமி குடியிருப்பில் புதிய மின் கம்பம் அமைக்கப்பட்ட காட்சி.

சுனாமி குடியிருப்பில் புதிய மின் கம்பம்

Published On 2022-07-20 13:30 IST   |   Update On 2022-07-20 13:30:00 IST
  • முத்தியால்பேட்டை சோலை நகர் தெற்கு சுனாமி குடியிருப்பில் மின் கம்பம் அபாயகரமாக இருந்தது.
  • அந்த பகுதி மக்கள் தி.மு.க. சேவை மையம் நிர்வாகி மதன்பாபுவிடம் அதனை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சோலை நகர் தெற்கு சுனாமி குடியிருப்பில் மின் கம்பம் அபாயகரமாக இருந்தது. அந்த பகுதி மக்கள் தி.மு.க. சேவை மையம் நிர்வாகி மதன்பாபுவிடம் அதனை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தி.மு.க. சேவை மைய நிர்வாகி மதன்பாபு மின்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டதால் மின்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News