புதுச்சேரி

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை சந்தித்த போது எடுத்த படம்.

புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

Published On 2022-12-03 10:11 IST   |   Update On 2022-12-03 10:11:00 IST
  • புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை சந்தித்து பேசினர்.
  • இந்த திட்டத்தை அமல்படுத்தினால் புதுவை மக்கள் அனைவருக்கும் நல்ல, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்.

புதுச்சேரி:

புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை சந்தித்து பேசினர்.

அப்போது பொதுப்பணித்துறை மூலம் வில்லியனூர், உப்பளம், முதலியார்பேட்டை, பாகூர் ஆகிய தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தாமதப்படு த்தாமல் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

கிராமப்பகுதிகளில் கூட தற்போது உப்புநீர் புகுந்து புதுவை மக்களுக்கு நல்ல குடிநீர் என்பதே கானல் நீராக உள்ளது. கடந்த ஆட்சியில் பிரெஞ்ச் அரசு நிதி ரூ.534 கோடி உதவியுடன் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.79 கோடி நிதி திரட்ட வேண்டும்.

ஆனால் இந்த நிதியை மாநில அரசு திரட்டாததால் பிரெஞ்ச் அரசிடம் இருந்து ரூ.455 கோடி நிதி பெற்று திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.

இந்த திட்டத்தை அமல்படுத்தினால் புதுவை மக்கள் அனைவருக்கும் நல்ல, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்.ஒட்டுமொத்த புதுவை மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரெஞ்ச் அரசின் ஏ.எப்.டி திட்டத்தை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News