புதுச்சேரி

உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

மழைநீரை வெளியேற்ற நேரு எம்.எல்.ஏ. நடவடிக்கை

Published On 2022-07-23 14:37 IST   |   Update On 2022-07-23 14:37:00 IST
  • சாந்தி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ளம் புகுந்தது.
  • மழை நீர் உள்வாங்க முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதி சாந்தி நகர் மற்றும் சாந்தி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ளம் புகுந்தது.

உப்பனாறு வாய்க்கால் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் மழை நீர் உள்வாங்க முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு புதுவை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் அழைத்து அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி மழைநீரும் வெளியேற்றப்பட்டது. உடனடியாக மழைநீரை வெளியேற்றிய எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News