புதுச்சேரி

நாட்டு நலபணிதிட்ட முகாமை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சீருடை வழங்கிய காட்சி. 

நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம்

Update: 2022-09-28 08:54 GMT
  • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக பள்ளி அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக வடக்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் உள்ளாட்சித் துறை கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக துறை நிபுணர் டாக்டர் ரத்தினவேல் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக பள்ளி அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார்.

புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ரங்கநாயகிவளவன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் ஆலோசகர் ரத்னப்பிரியா, அருண்குமார், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட சீருடை மற்றும் குறிப்பேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News