விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் நினைவு பரிசு வழங்கிய காட்சி.
தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா
- தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா கடந்த ஒரு வாரமாக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- நிறைவு நாள் விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தை நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் புதுவை கிளையும் இணைந்து தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா கடந்த ஒரு வாரமாக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிறைவு நாள் விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பரத்குமார் வரவேற்புரையாற்றினார். செங்கல்பட்டு மருத்துவ கல்லுரியின் பச்சிளம் குழந்தைகள் துணை பேராசிரியர் டாக்டர் மணிகுமார், பிறந்தவுடன் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வினா-வினாடி போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் பிரித்தி நன்றி கூறினார்.