புதுச்சேரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிவராண உதவி வழங்கினார்.

நமோ கிரிக்கெட் போட்டி வைத்திக்குப்பம் அணி வெற்றி

Published On 2023-01-25 09:15 GMT   |   Update On 2023-01-25 09:15 GMT
புதுவை மாநில பாஜக சார்பில் பிரதமர் மோடி பெயரில் நமோ கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தாகூர் அரசு கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் மாநிலத்தின் பல பகுதிகளை சேர்ந்த 50 அணிகள் பங்கேற்றன.

புதுச்சேரி:

மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகாமி (வயது 65). இவருடை ய குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடை ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் ரூ.9,700-ம், தனது சொந்த செலவில் ரூ.5 ஆயிரமும் சபாநாயகர் செல்வம் வழங்கினார். மேலும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பிரேம் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கதலை வர் தட்சிணாமூர்த்தி, பா.ஜனதா நிர்வாகிகள் குமாரசாமி, சக்திபாலன், லட்சுமி காந்தன், ஆறுமுகம், ராஜகுரு, தமிழ், பிரபாகரன், ஆனந்தன், திருஞானம், முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News