உப்பளம் தொகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் நவீன சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.
நவீன சி.சி.டி.வி. கேமராக்கள்-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- கேமராக்களும், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட கேமராக்களும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டடுள்ளது. முதல் கட்டமாக பெரிய பள்ளிகளில் சிறப்பு அம்சங்கள் உடைய சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்களும், வேகமாக செல்லும் வாகங்களை படமெடுக்கும் நவீன கேமராக்களும், அதிக துல்லியத்துடன் இரவு பார்வை தெளிவாக எடுக்கக் கூடிய அமைப்பு கொண்ட கேமராக்களும், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட கேமராக்களும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான ஆவணங்களை தயார் செய்து, பின்னர் கேமராக்கள் பொருத்தும் பணிக்கான ஆய்வுகளைஅனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மேற்கொண்டார். அப்போது, தனியார் நிறுவன வணிக வளர்ச்சி அதிகாரி பாலசுப்ரமணியன், தி.மு.க. பிரமுகர்கள் அஷ்ரப், நிசார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேஸீர், லாரன்ஸ், மோரில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏற்கனவே இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் உள்துறை அமைச்சர், டி.ஜி.பி. ஆகிேயாரிடம் மனு வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் இன்னும் அரசு சார்பாக பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.