புதுச்சேரி

ரத்த தானம் வழங்கிய சம்பத் எம்.எல்.ஏ.

சிறுமிக்கு அரிய வகை ரத்தம் வழங்கிய எம்.எல்.ஏ.

Published On 2023-01-28 08:49 GMT   |   Update On 2023-01-28 08:49 GMT
  • புதுவை அரும்பார்த்த புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 7 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
  • உடனே ராஜேந்திரன், சம்பத் எம்.எல்.ஏ. வைதொடர்பு கொண்டு ரத்த தானம் செய்ய கோரிக்கை விடுத்தார். இவரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பத் எம்.எல்.ஏ ரத்ததானம் செய்தார்.

புதுச்சேரி:

புதுவை அரும்பார்த்த புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 7 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு திடீரென உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைய தொடங்கியது. சிறுமிக்கு அறிய வகையான ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது.

பல இடங்களில் சிறுமியின் தந்தை ராஜேந்திரன் முயற்சித்தும் ரத்தம் கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனை ரத்த நன்கொடையாளர் பட்டியில் உள்ள எண்ணில் சம்பத் எம்.எல்.ஏ. தொலைபேசி எண்இருந்தது.

உடனே ராஜேந்திரன், சம்பத் எம்.எல்.ஏ. வைதொடர்பு கொண்டு ரத்த தானம் செய்ய கோரிக்கை விடுத்தார். இவரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பத் எம்.எல்.ஏ ரத்ததானம் செய்தார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட உடனேயே எம்.எல்.ஏ குழந்தைக்கு ரத்தம் தானம் செய்ய வந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சம்பத் எம்.எல்.ஏவுக்கு இது 45-வது ரத்த தானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News