புதுச்சேரி

மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரின்ஸ் சிட்டி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்ற காட்சி.

மனநல விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

Published On 2022-11-02 10:26 IST   |   Update On 2022-11-02 10:26:00 IST
  • உலக மனநல மாத விழிப்புணர்வை முன்னிட்டு புதுவை அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரின்ஸ் சிட்டி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
  • முன்னதாக அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் அனைவரையும் வரவேற்றார்.

புதுச்சேரி:

உலக மனநல மாத விழிப்புணர்வை முன்னிட்டு புதுவை அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரின்ஸ் சிட்டி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, ரோட்டரி உதவி ஆளுநர் மதிவாணன், ரோட்டரி கிளப் ஆப் பிரெஞ்சு சிட்டி தலைவர் சதிஷ்குமார், செயலாளர் சீனிவாசன், மருந்தியல் மருத்துவர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பாரதி பூங்கா முன்பு தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் முக்கிய சாலை கள் வழியாக சென்று மீண்டும் பாரதி பூங்காவில் முடிவடை ந்தது. இதில் அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரச மாதேவி ரவிச்சந்திரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், ரோட்டரி முன்னாள் சங்க தலைவர்கள் ராஜகணபதி, கோடி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆத்திச்சுவடி பள்ளி தாளாளர் சத்தியவண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News