புதுச்சேரி

அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

Published On 2022-12-06 03:58 GMT   |   Update On 2022-12-06 03:58 GMT
  • புஸ்சி வீதியில் மிதமான மழைக்காலங்களிலே தண்ணீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது.
  • இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

புதுச்சேரி:

புஸ்சி வீதியில் மிதமான மழைக்காலங்களிலே தண்ணீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

முன்பு இந்திராகாந்தி சதுக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். ஆனால் பொதுப்பணித்துறை சிறப்பு கவனம் செலுத்தி இப்போது மழைநீர் தேங்காத வண்ணம் வடிக்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டது போல் புஸ்சி வீதியிலும் மழைநீர் தேங்காத வண்ணம் வடிக்கால் சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டும் வருகிற நாட்களில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் மழைக்கால ங்களில் ஏற்படாத வகையில் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவனிடம் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அதற்கு அதிகாரி கண்டிப்பாக வரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் பூங்காவை முறைப்படுத்தும் படியும், சேதமடைந்த படிக்கட்டுகளை சீர் செய்யும் படியும் கென்னடி எம்.எல்.ஏ. செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பூங்கா சுத்தம் செய்யப்பட்டு படிக்கட்டுகள் சரி செய்யப்பட்டது. அதனை எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News