கோப்பு படம்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். 77 இடங்கள் அதிகரிப்பு
- அரசின் தீவிர முயற்சியினால் மீண்டும் தற்போது மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
- ஒட்டுமொத்தமாக 370 இடங்கள் அரசு ஒதுக்கீடாக புதுவை மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்து வக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.இங்கு 180 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இதில் 131 எம்.பி.பி.எஸ் இடங்கள் புதுவை மாணவர்களுக்கும், பிற இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ ஆணையம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிறுத்தி வைத்தது.
இது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசின் தீவிர முயற்சியினால் மீண்டும் தற்போது மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. 5 ஆண்டுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரி களில் ஆண்டுதோறும் அரசு இடங்கள் பெறப்படும். இதில் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் கடந்த ஆண்டைவிட தலா 100 இடங்கள் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரி களில் அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கீடாக பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்துடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ேபச்சுவார்த்தை முடிவில் பிம்ஸ் கல்லூரி 56, மணக்குள விநாயகர் கல்லூரி 91, வெங்கடேஸ்வரா கல்லூரி 92 என மொத்தம 239 இடங்கள் அரசு ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 131 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 370 இடங்கள் அரசு ஒதுக்கீடாக புதுவை மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 77 இடங்கள் அதிகம்.
இதுதவிர ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாநில ஒதுக்கீடாக 64 இடங்கள் உள்ளது.