கோப்பு படம்.
null
கவர்னர் தமிழிசை பொங்கல் வாழ்த்து
- தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனை வருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
- பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனை வருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பை யும், கலை களையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.
2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டா க ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மை யையும் பாரம்பரிய உணவு தானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனை வரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.